Archives: ஏப்ரல் 2021

கடினமான மக்கள்

லூசி வோர்ஸ்லி ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். பெரும்பாலான மக்களிடையே பிரசித்திபெற்ற மனிதர்களைப் போல, அவருக்கு சில நேரங்களில் மோசமான மின்னஞ்சல்கள் வரும் – அவருடைய விஷயத்தில், அவருடைய பேச்சின் தடையால் அவளுடைய r-உச்சரிப்பு w-உச்சரிப்பாக ஒலித்தது. ஒருவர் இவ்வாறு எழுதினார்: "லூசி, நான் மழுங்கி இருப்பேன்: உங்கள் சோம்பேறித்தனமான பேச்சை சரி செய்ய கடினமாக முயற்சியுங்கள் அல்லது உங்கள் பேச்சுக் குறிப்புகளிலிருந்து r-ஐ நீக்குங்கள். ஏனெனில் உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அமர்ந்து என்னால் பார்க்க முடியவில்லை அது என்னை கோபமூட்டுகிறது. அன்புடன், டேரன். ”

சிலருக்கு, இது போன்ற ஒரு உணர்ச்சியற்ற கருத்து அதற்கு சமமான முரட்டுத்தனமான பதிலைத் தருவதற்கு தூண்டக்கூடும். ஆனால் லூசி இவ்விதமாக பதிலளித்தார்: “ஓ டேரன், நீங்கள் என் முகத்திற்கு நேராக சொல்ல துணியாத ஒன்றைச் சொல்ல இணையத்தின் அநாமதேயத்தைப் பயன்படுத்தினீர்கள் என்று நினைக்கிறேன். தயவுசெய்து உங்கள் தயவற்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்! லூசி. ”

லூசியின் அந்த மெதுவான பிரதியுத்திரம் வேலை செய்தது. டேரன் மன்னிப்பு கேட்டு, அத்தகைய மின்னஞ்சலை மீண்டும் யாருக்கும் அனுப்ப மாட்டேன் என்று உறுதியளித்தார்..

“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும், ஆனால் கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (15:1). கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (வச.. 18). சக ஊழியரிடமிருந்து ஒரு விமர்சனக் கருத்து, குடும்ப உறுப்பினரிடமிருந்து ஒரு மோசமான கருத்து அல்லது தெரியாத நபரிடமிருந்து ஒரு மோசமான பதில் ஆகியவற்றைப் பெறும்போது, நம்முடைய தேர்வு இவ்வாறு இருக்கிறது: தீப்பிழம்புகளைத் தூண்டும் கோபமான வார்த்தைகளைப் பேச அல்லது அதை அணைக்கும் மென்மையான சொற்களைப் பேச. 

கோபத்தை  மாற்றும் வார்த்தைகளைப் பேச தேவன் நமக்கு உதவுவாராக - மற்றும் கடினமான நபர்களை மாற்றவும் உதவுவாராக. 

உங்களுக்கு இயேசுவின் வாக்குறுதி

ரோஹித்தின் பெற்றோர்கள் அவனை ஷீலாவிடம் ஒப்படைத்தபோது அழுதான். இது அவனது அம்மாவும் அப்பாவும் அவனை அங்கே விட்டுவிட்டு ஆராதனைக்கு சென்றதால் குழந்தை பருவத்திலிருக்கும் அவனுக்கு முதல் ஞாயிறு பள்ளி – அவன் அங்கு மகிழ்ச்சியாக இல்லை. அவன் நன்றாக இருப்பான் என்று ஷீலா அவர்களுக்கு உறுதியளித்தார். அவள் அவனை பொம்மைகளாலும் புத்தகங்களாலும் ஆறுதல்படுத்த முயன்றாள், ஒரு நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்தாள், சுற்றி நடந்தாள், அசையாமல் நின்றாள், அவனுக்கு என்ன வேடிக்கையாக இருக்குமோ அதை பேசினாள். ஆனால் எல்லா முயற்சியும் அதிக கண்ணீரையும் மற்றும் சத்தமான அழுகையையும் ஏற்படுதியது. பின்னர் அவள் அவன் காதில் ஐந்து எளிய சொற்களைக் கிசுகிசுத்தாள்: “நான் உன்னுடன் இருப்பேன்.” அமைதியும் ஆறுதலும் விரைவாக வந்தது.

சிலுவையில் அறையப்பட்ட அந்த வாரத்தில் இயேசு தம் நண்பர்களுக்கு இதேபோன்ற ஆறுதலான வார்த்தைகளை வழங்கினார்: “பிதா. . . உங்களுக்கு உதவவும், என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்”(யோவான் 14: 16-17). அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் இந்த வாக்குத்தத்தை  அவர்களுக்குக் கொடுத்தார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.” (மத்தேயு 28:20). இயேசு விரைவில் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தார், ஆனால் அவர் ஆவியானவரை தம் மக்களுக்குள் "தங்கி” மற்றும் வாழ அனுப்புவார்.

நமக்கு கண்ணீர் வழியும் போது ஆவியியானவரின் ஆறுதலையும் சமாதானத்தையும் அனுபவிக்கிறோம். நாம் என்ன செய்வது என்று யோசிக்கும்போது அவருடைய வழிகாட்டுதலைப் பெறுகிறோம் (யோவான் 14:26). தேவனைப் பற்றி மேலும் புரிந்துகொள்ளும்படிக்கு அவர் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைத் திறக்கிறார் (எபேசியர் 1: 17-20), நம்முடைய பலவீனத்தில் அவர் நமக்கு உதவுகிறார், நமக்காக வேண்டுதல்செய்கிறார் (ரோமர் 8: 26-27).

அவர் என்றென்றும் நம்முடன் இருக்கிறார்.

பயத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்

2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் பெரும் பாதிப்பு உலகத்தை அச்சத்தில் விட்டுச் சென்றது. மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர், நாடுகள் முடக்கப்பட்டிருந்தன, விமானங்கள் மற்றும் பெரிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களும் தங்களுக்கு வைரஸ் தொற்று வரக்கூடும் என்று அஞ்சினார்கள். பதட்டவியல் நிபுணரான கிரஹாம் டேவி, எதிர்மறையான செய்தி ஒளிபரப்புகள் "உங்களை சோகமாகவும் கவலையுற்றவர்களாகவும் மாற்றக்கூடும்" என்று நம்புகிறார். சமூக ஊடகங்களில் பரவிய ஒரு மீம், தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கும் ஒரு மனிதரைக் காட்டியது, மேலும் கவலைப்படுவதை எவ்வாறு நிறுத்துவது என்று அவர் கேட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அறையில் இன்னொரு நபர் வந்து டிவியை அணைத்தார், அந்த கேள்விக்கான பதில் கவனத்தை வேறு பக்கம் திருப்புவது தான் என்று பரிந்துரைத்தார்!

லூக்கா 12 கவலைப்படுவதை நிறுத்த உதவும் சில அறிவுரைகளை நமக்கு அளிக்கிறது: “அவருடைய ராஜ்யத்தையே தேடுங்கள்” (வச.. 31). அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு பரலோகத்தில் ஓர் உரிமை இருக்கிறது என்ற வாக்குறுதியில் கவனம் செலுத்தும்போது நாம் தேவனுடைய ராஜ்யத்தை தேடுகிறோம். நாம் சிரமத்தை எதிர்கொள்ளும்போது, ​​நம் கவனத்தை மாற்றி, தேவன் நம்மைப் பார்க்கிறார், நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளலாம் (வச. 24-30).

இயேசு தம்முடைய சீஷர்களை ஊக்குவிக்கிறார்: "பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்." (வச. 32). நம்மை ஆசீர்வதிப்பத்தில் தேவன் மகிழ்கிறார்! ஆகாயத்து பறவைகள் மற்றும் காட்டுப்பூஷ்பங்களை காட்டிலும் அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார் என்பதை அறிந்து  நாம் அவரை ஆராதிப்போம்(வச.. 22-29). கடினமான காலங்களில் கூட, நாம் வேதவசனங்களைப் படிக்கலாம், தேவனின் சமாதானத்திற்காக ஜெபிக்கலாம், நம்முடைய நல்ல, உண்மையுள்ள தேவன் மீது நம்பிக்கை வைக்கலாம்.

கடினமான களம் மற்றும் கனிவான இரக்கம்

 ஜேம்ஸுக்கு வெறும் ஆறு வயதாக இருந்தபோது, ​​அவரது மூத்த சகோதரர் டேவிட் ஒரு விபத்தில் பரிதாபமாக இறந்தார். அது டேவிட்டின் பதினான்காம் பிறந்தநாளுக்கு முந்தைய நாள். அதை தொடர்ந்த ஆண்டுகளில், சில சமயங்களில் தனது மூத்த மகன் வளர்ந்து வரும் போது சவால்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை நினைவூட்டிய ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் தனது தாயான மார்கரெட்டை ஜேம்ஸ் ஆறுதல்படுத்த பெரிதும் முயன்றார். ஜேம்ஸ் பாரியின் வளமான கற்பனையில், பல பத்தாண்டுகளுக்கு பிறகும், அவரது யோசனை மிகவும் விரும்பப்படும், ஒருபோதும் பழையதாகாத குழந்தைகளின் கதை கதாபாத்திரம் ஒன்றிற்கு உத்வேகம் அளிக்கும்: பீட்டர் பான். நடைபாதையின் ஊடே ஒரு பூ தன் வழியில் வெளிவருவது போல, நினைத்துப்பார்க்க முடியாத மன வேதனையின் கடினமான களத்திலிருந்து கூட நல்லது வெளிப்பட்டது.

தேவன், எல்லையற்ற படைப்பாற்றலின் வழியில், நம்முடைய மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து நல்லதை வெளியே கொண்டு வர முடியும் என்ற எண்ணம் எவ்வளவு ஆறுதலளிக்கிறது. பழைய ஏற்பாட்டிளுள்ள ரூத்தின் சரித்திரத்தில் இது ஒரு அழகான எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. நவோமி தனது இரண்டு மகன்களையும் இழந்து அவளுக்கு எந்த ஆதரவும் இல்லாமல் போனது. அவளுடைய விதவை மருமகள் ரூத் நவோமியுடன் தங்குவதற்கும் தன்னுடைய தேவனைச் சேவிப்பதற்கும் தேர்ந்தெடுத்தாள் (ரூத் 1:16). இறுதியில், தேவன் அவர்களின் தேவைகளை சந்தித்தவிதம் அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்தது. ரூத் மறுமணம் செய்து ஒரு குழந்தையைப் பெற்றாள், “அவர்கள் அவருக்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள். அவர் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தந்தை” (4:17). அவரும் இயேசுவின் மூதாதையர்களிள் ஒருவராக பட்டியலிடப்படுட்டார் (மத்தேயு 1: 5).

தேவனின் கனிவான இரக்கம் நமது திறனுக்கு அப்பாற்பட்டு, ஆச்சரியமூட்டும் இடங்களில் நம்மைச் சந்திக்கிறது. பார்த்துத்துக்கொண்டே இருஙகள்! ஒருவேளை நீங்கள் இன்று அதைப் பார்ப்பீர்கள்.